முகப்பு |
வங்கா வரிப் பறைச் |
341. குறிஞ்சி |
வங்கா வரிப் பறைச் சிறு பாடு முணையின், |
||
செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும் |
||
விளையாடு இன் நகை அழுங்கா, பால் மடுத்து, |
||
அலையா, உலவை ஓச்சி, சில கிளையாக் |
||
5 |
குன்றக் குறவனொடு குறு நொடி பயிற்றும் |
|
துணை நன்கு உடையள், மடந்தை: யாமே |
||
வெம் பகை அரு முனைத் தண் பெயல் பொழிந்தென, |
||
நீர் இரங்கு அரை நாள் மயங்கி, கூதிரொடு |
||
வேறு புல வாடை அலைப்ப, |
||
10 |
துணை இலேம், தமியேம், பாசறையேமே. | உரை |
வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்
|