முகப்பு |
வடு இன்று நிறைந்த |
130. நெய்தல் |
வடு இன்று நிறைந்த மான் தேர்த்தெண் கண் |
||
மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப, |
||
கோலின் எறிந்து காலைத் தோன்றிய |
||
செந் நீர்ப் பொது வினைச் செம்மல் மூதூர்த் |
||
5 |
தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ? |
|
எனை விருப்புடையர் ஆயினும், நினைவிலர்; |
||
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும் |
||
வாடிய வரியும் நோக்கி, நீடாது, |
||
'எவன் செய்தனள், இப் பேர் அஞர் உறுவி?' என்று |
||
10 |
ஒரு நாள் கூறின்றுமிலரே; விரிநீர் |
|
வையக வரையளவு இறந்த, |
||
எவ்வ நோய்; பிறிது உயவுத் துணை இன்றே. | உரை | |
பிரிவிடை மெலிந்த தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது.- நெய்தல்தத்தனார்
|