முகப்பு |
கண்டனென் மகிழ்ந |
30. மருதம் |
கண்டனென்-மகிழ்ந!-கண்டு எவன்செய்கோ?- |
||
பாணன் கையது பண்புடைச் சீறியாழ் |
||
யாணர் வண்டின் இம்மென இமிரும், |
||
ஏர்தரு தெருவின், எதிர்ச்சி நோக்கி, நின் |
||
5 |
மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர் |
|
கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி- |
||
கால் ஏமுற்ற பைதரு காலை, |
||
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி, உடன் வீழ்பு, |
||
பலர் கொள் பலகை போல- |
||
10 |
வாங்கவாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே. | உரை |
பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், 'யாரையும் அறியேன்' என்றாற்குத் தோழி சொல்லியது.-கொற்றனார்
|