முகப்பு |
செந் நிலப் புறவின் |
321. முல்லை |
செந் நிலப் புறவின் புன் மயிர்ப் புருவை |
||
பாடு இன் தெள் மணித் தோடு தலைப்பெயர, |
||
கான முல்லைக் கய வாய் அலரி |
||
பார்ப்பன மகளிர் சாரற் புறத்து அணிய, |
||
5 |
கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை, |
|
புல்லென் வறு மனை நோக்கி, மெல்ல |
||
வருந்தும்கொல்லோ, திருந்துஇழை அரிவை? |
||
வல்லைக் கடவுமதி தேரே; சென்றிக, |
||
குருந்து அவிழ் குறும்பொறை பயிற்ற, |
||
10 |
பெருங் கலி மூதூர் மரம் தோன்றும்மே. | உரை |
வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.-மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
|