முகப்பு |
தீயும் வளியும் |
294. குறிஞ்சி |
தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு, |
||
நோயும் இன்பமும் ஆகின்றுமாதோ; |
||
மாயம் அன்று-தோழி!-வேய் பயின்று, |
||
எருவை நீடிய பெரு வரைஅகம்தொறும், |
||
5 |
தொன்று உறை துப்பொடு முரண் மிகச் சினைஇக் |
|
கொன்ற யானைக் கோடு கண்டன்ன, |
||
செம் புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள் |
||
சிலம்புடன் கமழும் சாரல் |
||
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே! | உரை | |
மணமனையுள் புக்க தோழி தலைமகளது கவின் கண்டு சொல்லியது.- புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்
|