முகப்பு |
துனி தீர் கூட்டமொடு |
216. மருதம் |
துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும், |
||
இனிதே, காணுநர்க் காண்புழி வாழ்தல்; |
||
கண்ணுறு விழுமம் கை போல் உதவி, |
||
நம் உறு துயரம் களையார்ஆயினும், |
||
5 |
இன்னாதுஅன்றே, அவர் இல் ஊரே; |
|
எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும் |
||
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண், |
||
ஏதிலாளன் கவலை கவற்ற, |
||
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக் |
||
10 |
கேட்டோர் அனையராயினும், |
|
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே. | உரை | |
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தலைமகன் தலைநின்று ஒழுகப் படாநின்ற பரத்தை, பாணற்குஆயினும் விறலிக்குஆயினும் சொல்லுவாளாய், நெருங்கிச் சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்
|