முகப்பு |
நோகோ யானே நெகிழ்ந்தன |
26. பாலை |
நோகோ யானே; நெகிழ்ந்தன வளையே- |
||
செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை |
||
விண்டுப் புரையும் புணர் நிலை நெடுங் கூட்டுப் |
||
பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய, |
||
5 |
சுடர் முழுது எறிப்பத் திரங்கிச் செழுங் காய் |
|
முட முதிர் பலவின் அத்தம், நும்மொடு |
||
கெடு துணை ஆகிய தவறோ?-வை எயிற்று, |
||
பொன் பொதிந்தன்ன சுணங்கின், |
||
இருஞ் சூழ் ஓதி, பெருந் தோளாட்கே. | உரை | |
தலைவி பிரிவு உணர்ந்து வேறுபட்டமை சொல்லி, தோழி செலவு அழுங்குவித்தது.-சாத்தந்தையார்
|