முகப்பு |
புல்லேன் மகிழ்ந |
340. மருதம் |
புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்- |
||
கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன் |
||
படை மாண் பெருங் குள மடை நீர் விட்டென, |
||
கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை |
||
5 |
அள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி, |
|
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து, |
||
செஞ் சால் உழவர் கோல் புடை மதரி, |
||
பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும் |
||
வாணன் சிறுகுடி அன்ன, என் |
||
10 |
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே! | உரை |
பரத்தையிற் மறுத்தந்த தலைமகனைத் தலைமகள் நொந்து சொல்லியது.-நக்கீரர்
|