முகப்பு |
புள்ளுப் பதி சேரினும் |
253. குறிஞ்சி |
புள்ளுப் பதி சேரினும், புணர்ந்தோர்க் காணினும், |
||
பள்ளி யானையின் வெய்ய உயிரினை, |
||
கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து |
||
எனவ கேளாய், நினையினை, நீ நனி: |
||
5 |
உள்ளினும் பனிக்கும்-ஒள் இழைக் குறுமகள், |
|
பேர் இசை உருமொடு மாரி முற்றிய, |
||
பல் குடைக் கள்ளின் வண் மகிழ்ப் பாரி, |
||
பலவு உறு குன்றம் போல, |
||
பெருங் கவின் எய்திய அருங் காப்பினளே. | உரை | |
செறிப்பு அறிவிறீஇ வரைவு கடாயது.-கபிலர்
|