முகப்பு |
வாளை |
310. மருதம் |
விளக்கின் அன்ன சுடர் விடு தாமரை, |
||
களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க, |
||
உண்துறை மகளிர் இரிய, குண்டு நீர் |
||
வாளை பிறழும் ஊரற்கு, நாளை |
||
5 |
மகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே! |
|
தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி |
||
உடன்பட்டு, ஓராத் தாயரொடு ஒழிபுடன் |
||
சொல்லலைகொல்லோ நீயே-வல்லை, |
||
களிறு பெறு வல்சிப் பாணன் கையதை |
||
10 |
வள் உயிர்த் தண்ணுமை போல, |
|
உள் யாதும் இல்லது ஓர் போர்வைஅம் சொல்லே? | உரை | |
வாயிலாகப் புக்க விறலியைத் தோழி சொல்லியது; விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉம் ஆம்.-பரணர்
|
340. மருதம் |
புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்- |
||
கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன் |
||
படை மாண் பெருங் குள மடை நீர் விட்டென, |
||
கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை |
||
5 |
அள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி, |
|
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து, |
||
செஞ் சால் உழவர் கோல் புடை மதரி, |
||
பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும் |
||
வாணன் சிறுகுடி அன்ன, என் |
||
10 |
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே! | உரை |
பரத்தையிற் மறுத்தந்த தலைமகனைத் தலைமகள் நொந்து சொல்லியது.-நக்கீரர்
|
390. மருதம் |
வாளை வாளின் பிறழ, நாளும் |
||
பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும் |
||
கை வண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த |
||
வயல் வெள் ஆம்பல் உருவ நெறித் தழை |
||
5 |
ஐது அகல் அல்குல் அணி பெறத் தைஇ, |
|
விழவின் செலீஇயர் வேண்டும்மன்னோ; |
||
யாணர் ஊரன் காணுநன்ஆயின், |
||
வரையாமைஓ அரிதே; வரையின், |
||
வரைபோல் யானை, வாய்மொழி முடியன் |
||
10 |
வரை வேய் புரையும் நல் தோள் |
|
அளிய-தோழி!-தொலையுந பலவே. | உரை | |
பாங்கு ஆயின வாயில் கேட்ப, நெருங்கிச் சொல்லியது; தலைமகள் தோழிக்கு உரைப் பாளாய், வாயிலாகப் புக்கார் கேட்ப, சொல்லியதூஉம் ஆம்.-ஒளவையார்
|
400. மருதம் |
வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும் |
||
நெல் விளை கழனி நேர் கண் செறுவின், |
||
அரிவனர் இட்ட சூட்டு அயல், பெரிய |
||
இருஞ் சுவல் வாளை பிறழும் ஊர! |
||
5 |
நினின்று அமைகுவென்ஆயின், இவண் நின்று, |
|
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ? |
||
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து, |
||
அறம் கெட அறியாதாங்கு, சிறந்த |
||
கேண்மையொடு அளைஇ, நீயே |
||
10 |
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே. | உரை |
பரத்தை தலைவனைப் புகழ்ந்தது. முன்பு நின்று யாதோ புகழ்ந்தவாறு எனின், 'நின் இன்று அமையாம்' என்று சொன்னமையான் என்பது.-ஆலங்குடி வங்கனார்
|