முகப்பு |
யாயும் ஞாயும் |
40. குறிஞ்சி |
யாயும் ஞாயும் யார் ஆகியரோ? |
||
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்? |
||
யானும் நீயும் எவ் வழி அறிதும்? |
||
செம் புலப் பெயல் நீர் போல |
||
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. | உரை | |
இயற்கைப் புணரிச்சி புணர்ந்த பின்னர், 'பிரிவர்' எனக் கருதி அஞ்சிய தலைமகள் குறிப்பு வேறுபாடு கண்டு, தலைமகன் கூறியது. - செம்புலப்பெயனீரார் |