முகப்பு |
நமக்கு ஒன்று உரையார் |
266. பாலை |
நமக்கு ஒன்று உரையார் ஆயினும், தமக்கு ஒன்று |
|
இன்னா இரவின் இன் துணை ஆகிய |
|
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ- |
|
மறப்பு அரும் பணைத் தோள் மரீஇத் |
|
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே?- |
|
வரையாது பிரிந்த இடத்துத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நக்கீரர் |