11-20 |
11 |
மனை நடு வயலை வேழம் சுற்றும் |
|
துறை கேழ் ஊரன் கொடுமை நாணி, |
|
'நல்லன்' என்றும், யாமே; |
|
'அல்லன்' என்னும், என் தட மென் தோளே. |
|
பாணன் முதலாயினார்க்குத் தலைமகன் கொடுமை கூறி வாயில் மறுத்த தலைமகள், கழறிய பாங்கற்கு வாயில் நேர்வாள், சொல்லியது. 'தலைவன் எவ்வாறு தப்பி ஒழுகினும், அவன் கொடுமை நின்னால் புலப்படுதல் தகாது' என்று கழறிய பாங்கிக்குத் தலைம |
12 |
கரை சேர் வேழம் கரும்பின் பூக்கும் |
|
துறை கேழ் ஊரன் கொடுமை நன்றும் |
|
ஆற்றுகதில்ல, யாமே; |
|
தோற்கதில்ல, என் தட மென் தோளே. |
|
உழையர் நெருங்கிக் கூறிய திறமும் தனது ஆற்றாமையும் நினைந்து, வாயில் நேரக் கருதிய தலைமகள், 'பரத்தையர்க்குப் பின்பும் அவன் சிறப்புச் செய்தான்' என்பது கேட்டு, பொறாளாய்க் கருத்து அழிந்து, தன்னுள்ளே சொல்லியது. 2 |
13 |
பரியுடை நல் மான் பொங்குஉளை அன்ன |
|
அடைகரை வேழம் வெண் பூப் பகரும், |
|
தண் துறை ஊரன் பெண்டிர், |
|
துஞ்சு ஊர் யாமத்தும், துயில் அறியலரே. |
|
வாயிலாய்ப் புக்கார்க்குத் தலைமகள், 'அவன் பெண்டிர் நள்ளென் யாமத்தும் துயிலார்; அவர் அறியாமல் அவன் வரும் திறம் யாது?' எனச் சொல்லி வாயில் மறுத்தது. 3 |
14 |
கொடிப் பூ வேழம் தீண்டி, அயல |
|
வடிக்கொள் மாஅத்து வண் தளிர் நுடங்கும் |
|
அணித் துறை ஊரன் மார்பே |
|
பனித் துயில் செய்யும் இன் சாயற்றே. |
|
தலைமகள் புணர்ச்சி வேட்கையைக் குறிப்பினான் உணர்ந்த தோழி, 'அவன் கொடுமை நினையாது அவன் மார்பை நினைந்து ஆற்றாயாகின்றது என்னை?' என்றாட்கு, 'அவன் கொடியனேஆயினும், அவன் மார்பு குளிர்ந்த துயிலைச் செய்யும் இனிய சாயலை உடைத |
15 |
மணல் ஆடு மலிர்நிறை விரும்பிய, ஒண் தழை, |
|
புனல் ஆடு மகளிர்க்குப் புணர் துணை உதவும் |
|
வேழ மூதூர் ஊரன் |
|
ஊரன் ஆயினும், ஊரன் அல்லன்னே. |
|
சேணிடைப் பிரிந்து வந்து உடன் உறைகின்ற தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாகின்றது என்று குறிப்பினான் உணர்ந்து, தலைமகள் வேறுபட்டாளாக, தோழி அதனை அறியாது, ' அவன் உடன்உறையவும் வேறுபடுகின்றது என்னை?' என்றட்கு அவள் சொல்லியது. |
16 |
ஓங்கு பூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால் |
|
சிறு தொழுமகளிர் அஞ்சனம் பெய்யும் |
|
பூக் கஞல் ஊரனை உள்ளி, |
|
பூப் போல் உண்கண் பொன் போர்த்தனவே. |
|
வாயிலாய்ப் புகுந்தார்க்குத் தோழி, 'அவன் வரவையே நினைத்து இவள் கண்ணும் பசந்தன; இனி அவன் வந்து பெறுவது என்னை?' எனச் சொல்லி, வாயில் மறுத்தது. 6 |
17 |
புதல் மிசை நுடங்கும் வேழ வெண் பூ |
|
விசும்பு ஆடு குருகின் தோன்றும் ஊரன் |
|
புதுவோர் மேவலன் ஆகலின், |
|
வறிது ஆகின்று, என் மடம் கெழு நெஞ்சே. |
|
தலைமகன் பரத்தையிற் பிரிந்த வழி, 'இவ்வாறு ஒழுகுதலும் ஆடவர்க்கு இயல்பு அன்றே; நீ இதற்கு நெஞ்சு அழிகின்றது என்னை?' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 7 |
18 |
இருஞ் சாய் அன்ன செருந்தியொடு வேழம் |
|
கரும்பின் அலமரும் கழனி ஊரன், |
|
பொருந்து மலர் அன்ன என் கண் அழ, |
|
பிரிந்தனன் அல்லனோ, 'பிரியலென்' என்றே? |
|
பரத்தையிற் பிரிந்து வந்து தெளித்துக் கூடிய தலைமகற்குப் பின் அவ் ஓழுக்கம் உளதாயவழி, அவன் வரவிடுத்த வாயில்கட்குத் தலைமகள் சொல்லியது. 8 |
19 |
எக்கர் மாஅத்துப் புதுப் பூம் பெருஞ் சினை, |
|
புணர்ந்தோர் மெய்ம் மணம் கமழும் தண் பொழில், |
|
வேழ வெண் பூ வெள் உளை சீக்கும் |
|
ஊரன் ஆகலின் கலங்கி, |
|
5 |
மாரி மலரின் கண் பனி உகுமே. |
'பல் நாள் அவன் சேணிடைப் பிரியவும் ஆற்றியுளையாகிய நீ சில் நாள் அவன் புறத்து ஒழுகுகின்ற இதற்கு ஆற்றாயாகின்றது என்னை?' என்ற தோழிக்கு, 'எதிர்ப்பாடு இன்றி ஓர் ஊர்க்கண்ணே உறைகையினாலே ஆற்றேனாகின்றேன்' எனத் தலைமகள் செ |
20 |
அறு சில் கால அஞ்சிறைத் தும்பி |
|
நூற்றிதழ்த் தாமரைப் பூச் சினை சீக்கும், |
|
காம்பு கண்டன்ன தூம்புடை, வேழத்துத் |
|
துறை நணி ஊரனை உள்ளி, என் |
|
5 |
இறை ஏர் எல் வளை நெகிழ்பு ஓடும்மே. |
தலைமகளை வாயில் நேர்வித்தற் பொருட்டாக, 'காதலர் கொடுமை செய்தாராயினும், அவர் திறம் மறவாதொழியல் வேண்டும்' என்று முகம்புகுகின்ற தோழிக்கு, 'என் கைவளை நில்லாதாகின்றது அவரை நினைந்ததன் பயன் அன்றே; இனி அமையும்' எனத் த |