81-90 |
81 |
குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை |
|
அரிப்பறை வினைஞர் அல்குமிசைக் கூட்டும், |
|
மலர் அணி வாயில் பொய்கை, ஊர! நீ |
|
என்னை 'நயந்தனென்' என்றி; நின் |
|
5 |
மனையோள் கேட்கின், வருந்துவள் பெரிதே. |
தன்னைக் கொடுமை கூறினாள் தலைமகள் என்பது கேட்ட பரத்தை, தலைமகன் வந்து தன்மேல் அன்புடைமை கூறினானாக, அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. 1 |
82 |
வெகுண்டனள் என்ப, பாண! நின் தலைமகள் |
|
'மகிழ்நன் மார்பின் அவிழ் இணர் நறுந் தார்த் |
|
தாது உண் பறவை வந்து, எம் |
|
போது ஆர் கூந்தல் இருந்தன' எனவே. |
|
மனைவயிற் புகுந்த பாணற்குத் தலைமகன் கேட்குமாற்றால் தலைமகள் சொல்லியது. 2 |
83 |
மணந்தனை அருளாய் ஆயினும், பைபயத் |
|
தணந்தனை ஆகி, உய்ம்மோ நும் ஊர் |
|
ஒண் தொடி முன் கை ஆயமும் |
|
தண் துறை ஊரன் பெண்டு எனப்படற்கே. |
|
வரைந்த அணுமைக்கண்ணே தலைமகற்குப் புறத்தொழுக்கம் உண்டாகிய வழி, அதனை அறிந்த தலைவி அவனோடு புலந்து சொல்லியது. 3 |
84 |
செவியின் கேட்பினும் சொல் இறந்து வெகுள்வோள், |
|
கண்ணின் காணின், என் ஆகுவள்கொல் |
|
நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும் |
|
தைஇத் தண் கயம் போல, |
|
5 |
பலர் படிந்து உண்ணும் நின் பரத்தை மார்பே? |
பரத்தையர் மனைக்கண் தங்கிப் புணர்ச்சிக் குறியோடு வாயில் வேண்டி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. 4 |
85 |
வெண் நுதல் கம்புள் அரிக் குரல் பேடை |
|
தண் நறும் பழனத்துக் கிளையோடு ஆலும் |
|
மறு இல் யாணர் மலி கேழ் ஊர! நீ |
|
சிறுவரின் இனைய செய்தி; |
|
5 |
நகாரோ பெரும! நிற் கண்டிசினோரே? |
தலைமகன் பரத்தையர்மேல் காதல் கூர்ந்து நெடித்துச் செல்வுழி, மனையகம் புகுந்தானாகத் தலைவி கூறியது. 5 |
86 |
வெண் தலைக் குருகின் மென் பறை விளிக் குரல் |
|
நீள் வயல் நண்ணி இமிழும் ஊர! |
|
எம் இவண் நல்குதல் அரிது; |
|
நும் மனை மடந்தையொடு தலைப்பெய்தீமே. |
|
'புதல்வன் கூறிய மாற்றம் தலைமகட்குப் பாங்காயினார் கூறக் கேட்டான்' என்பது அறிந்த பரத்தை அதற்குப் புலந்து, தலைமகற்குச் சொல்லியது. 6 |
87 |
பகன்றைக் கண்ணி பல் ஆன் கோவலர் |
|
கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும் |
|
யாணர் ஊர! நின் மனையோள் |
|
யாரையும் புலக்கும்; எம்மை மற்று எவனோ? |
|
தலைமகள் தன்னைப் புறங்கூறினாள் எனக் கேட்ட காதல்பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்ப, தலைமகனோடு புலந்து சொல்லியது. 7 |
88 |
வண் துறை நயவரும் வள மலர்ப் பொய்கைத் |
|
தண் துறை ஊரனை, எவ்வை எம் வயின் |
|
வருதல் வேண்டுதும் என்பது |
|
ஒல்லேம் போல், யாம் அது வேண்டுதுமே. |
|
தலைமகனை நயப்பித்துக் கொள்கையில் விருப்பு இல்லாதாள் போல, அவ்வாறு கோடலையே விரும்புவாள், 'அது தனக்கு முடியாது' எனத் தலைமகள் புறனுரைத்தாள் எனக் கேட்ட பரத்தை அவட்குப் பாங்காயினார்க்குச் சொல்லியது. 8 |
89 |
அம்ம வாழி, பாண! எவ்வைக்கு |
|
எவன்? பெரிது அளிக்கும் என்ப பழனத்து |
|
வண்டு தாது ஊதும் ஊரன் |
|
பெண்டு என விரும்பின்று, அவள்தன் பண்பே. |
|
'தலைமகன் தலைமகளைப் போற்றி ஒழுகாநின்றான்' என்பது கேட்ட காதல்பரத்தை அவன் பாணனுக்குச் சொல்லுவாளாய் அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. 9 |
90 |
மகிழ்நன் மாண்குணம் வண்டு கொண்டனகொல்? |
|
வண்டின் மாண்குணம் மகிழ்நன் கொண்டான்கொல்? |
|
அன்னது ஆகலும் அறியாள், |
|
எம்மொடு புலக்கும், அவன் புதல்வன் தாயே. |
|
தலைமகன் தன் மனைக்கண் சொல்லாமல் தான் விலக்குகின்றாளாகத் தலைமகள் கூறினாள் என்பது கேட்ட காதல் பரத்தை தலைமகன் கேட்குமாற்றால் அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. 10 |