131-140 |
131 |
நன்றே, பாண! கொண்கனது நட்பே |
|
தில்லை வேலி இவ் ஊர்க் |
|
கல்லென் கௌவை எழாஅக்காலே. |
|
வாயில் வேண்டி வந்த பாணன் தலைமகன் காதன்மை கூறினானாக, தலைமகள் வாயில் மறுப்பாள் அவற்குக் கூறியது. 1 |
132 |
அம்ம வாழி, பாண! புன்னை |
|
அரும்பு மலி கானல் இவ் ஊர் |
|
அலர் ஆகின்று, அவர் அருளுமாறே. |
|
வாயில் வேண்டி வந்த பாணன், 'நீர் கொடுமை கூற வேண்டா; நும்மேல் அருள் உடையர்' என்றாற்குத் தலைமகள் சொல்லியது. 2 |
133 |
யான் எவன் செய்கோ? பாண! ஆனாது |
|
மெல்லம் புலம்பன் பிரிந்தென, |
|
புல்லென்றன, என் புரி வளைத் தோளே! |
|
வாயிலாய்ப் புகுந்த பாணன் தலைமகள் தோள் மெலிவு கண்டு, 'மனைப்புறத்துப் போய் வந்த துணையானே இவ்வாறு வேறுபடுதல் தகாது' என்றாற்கு அவள் சொல்லியது. 3 |
134 |
காண்மதி, பாண! இருங் கழிப்... |
|
பாய்பரி நெடுந் தேர்க் கொண்கனொடு |
|
தான் வந்தன்று, என் மாமைக் கவினே. |
|
பிரிவின்கண் தலைமகள் கவின் தொலைவு கண்டு வெறுத்து ஒழுகுகின்ற பாணற்குத் தலைமகன் வந்துழிக் கவின் எய்திய தலைமகள் சொல்லியது. 4 |
135 |
பைதலம் அல்லேம், பாண! பணைத் தோள், |
|
ஐது அமைந்து அகன்ற அல்குல், |
|
நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே. |
|
பரத்தை ஒருத்தியைத் தலைப்பெய்வான் வேண்டி அதனைத் தலைமகன் மறைத்து ஒழுகுகின்றது அறிந்த தலைமகள் அவன் கேட்குமாற்றால் பாணற்குச் சொல்லியது. 5 |
136 |
நாண் இலை மன்ற, பாண! நீயே |
|
கோள் நேர் இலங்கு வளை நெகிழ்த்த |
|
கானல் அம் துறைவற்குச் சொல் உகுப்போயே! |
|
வாயிலாய்ப் புகுந்து தலைமகன் குணம் கூறிய பாணற்கு வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது. 6 |
137 |
நின் ஒன்று வினவுவல், பாண! நும் ஊர்த் |
|
திண் தேர்க் கொண்கனை நயந்தோர் |
|
பண்டைத் தம் நலம் பெறுபவோ மற்றே? |
|
தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்து நீங்கின இடத்தும், அவன் முன்பு செய்த தீங்கு நினைந்து தலைமகள் வேறுபட்டிருந்தாளாக, இனி ' இந்த வேறுபாடு என்?' என்று வினவிய பாணற்கு அவள் சொல்லியது 7 |
138 |
பண்பு இலை மன்ற, பாண! இவ் ஊர் |
|
அன்பு இல கடிய கழறி, |
|
மென் புலக் கொண்கனைத் தாராதோயே! |
|
தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்தது அறியாது வந்த பாணற்குத் தலைமகள் நகையாடிச் சொல்லியது. 8 |
139 |
அம்ம வாழி, கொண்க! எம் வயின் |
|
மாண் நலம் மருட்டும் நின்னினும், |
|
பாணன் நல்லோர் நலம் சிதைக்கும்மே. |
|
ஆற்றாமை வாயிலாகப் புகுந்திருந்த தலைமகற்குப் பாணன் வந்துழித் தலைமகள் சொல்லியது. 9 |
140 |
காண்மதி, பாண! நீ உரைத்தற்கு உரியை |
|
துறை கெழு கொண்கன் பிரிந்தென, |
|
இறை கேழ் எல் வளை நீங்கிய நிலையே. |
|
பாணன் தூதாகிச் செல்ல வேண்டும் குறிப்பினளாகிய தலைமகள் அவற்குத் தன் மெலிவு காட்டிச் சொல்லியது. 10 |