271-280 |
271 |
அவரை அருந்த மந்தி பகர்வர் |
|
பக்கின் தோன்றும் நாடன் வேண்டின், |
|
பசுப்போல் பெண்டிரும் பெறுகுவன்; |
|
தொல் கேள் ஆகலின், நல்குமால் இவட்கே. |
|
தலைமகன் வரைவுவேண்டிவிடத் தமர் மறுத்துழி, செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது. 1 |
272 |
கரு விரல் மந்திக் கல்லா வன் பறழ் |
|
அரு வரைத் தீம் தேன் எடுப்பி, அயலது |
|
உரு கெழு நெடுஞ் சினைப் பாயும் நாடன் |
|
இரவின் வருதல் அறியான்; |
|
5 |
'வரும் வரும்' என்ப தோழி! யாயே. |
அல்லகுறிப்பட்டு நீங்கும் தலைமகன் சிறைப்புறத்தானாக, முன்னை நாள் நிகழ்ந்ததனைத் தோழிக்குச் சொல்லுவாள் போன்று, தலைமகள் சொல்லியது. 2 |
273 |
அத்தச் செயலைத் துப்பு உறழ் ஒண் தளிர் |
|
புன் தலை மந்தி வன் பறழ் ஆரும் |
|
நல் மலை நாட! நீ செலின், |
|
நின் நயந்து உறைவி என்னினும் கலிழ்மே. |
|
வரைவிடை வைத்துப் பிரியும் தலைமகன் 'நின் துணைவியை உடம்படுவித்தேன்; இனி நீயே இதற்கு உடம்படாது கலிழ்கின்றாய்' என்றாற்குத் தோழி கூறியது. 3 |
274 |
மந்திக் கணவன் கல்லாக் கடுவன், |
|
ஒண் கேழ் வயப்புலி குழுமலின், விரைந்து, உடன் |
|
குன்று உயர் அடுக்கம் கொள்ளும் நாடன் |
|
சென்றனன் வாழி, தோழி! என் |
|
5 |
மென் தோள் கவினும், பாயலும், கொண்டே. |
வரைவிடை வைத்துப் பிரிந்துழி, ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 4 |
275 |
குரங்கின் தலைவன் குரு மயிர்க் கடுவன் |
|
சூரல்அம் சிறு கோல் கொண்டு, வியல் அறை |
|
மாரி மொக்குள் புடைக்கும் நாட! |
|
யாம் நின் நயந்தனம் எனினும், எம் |
|
5 |
ஆய்நலம் வாடுமோ அருளுதி எனினே? |
வரையாது வந்தொழுகும் தலைமகன் இடையிட்டு வருதலால், எதிர்ப்பாடு பெறாத தோழி குறியிடத்து எதிர்ப்பட்டு, அவன் கொடுமை கூறி, நெருங்கிச் சொல்லியது. 5 |
276 |
மந்திக் காதலன் முறி மேய் கடுவன் |
|
தண் கமழ் நறைக் கொடி கொண்டு, வியல் அறைப் |
|
பொங்கல் இள மழை புடைக்கும் நாட! |
|
நயவாய்ஆயினும் வரைந்தனை சென்மோ |
|
5 |
கல் முகை வேங்கை மலரும் |
நல் மலை நாடன் பெண்டு எனப் படுத்தே! |
|
வரையாது வந்தொழுகும் தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லியது. 6 |
277 |
குறவர் முன்றில் மா தீண்டு துறுகல் |
|
கல்லா மந்தி கடுவனோடு உகளும் |
|
குன்ற நாட! நின் மொழிவல்; என்றும், |
|
பயப்ப நீத்தல் என் இவள் |
|
5 |
கயத்து வளர் குவளையின் அமர்த்த கண்ணே. |
வரையாது வந்தொழுகும் தலைமகன் புணர்ந்து நீங்குழி, எதிர்ப்பட்ட தோழி வரைவு கடாயது. 7 |
278 |
சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல் |
|
குரங்கின் வன் பறழ் பாய்ந்தென, இலஞ்சி |
|
மீன் எறி தூண்டிலின் நிவக்கும் நாடன் |
|
உற்றோர் மறவா நோய் தந்து, |
|
5 |
கண்டோர் தண்டா நலம் கொண்டனனே! |
வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 8 |
279 |
கல் இவர் இற்றி புல்லுவன ஏறிக் |
|
குளவி மேய்ந்த மந்தி துணையொடு |
|
வரைமிசை உகளும் நாட! நீ வரின், |
|
கல் அகத்தது எம் ஊரே; |
|
5 |
அம்பல் சேரி அலர் ஆங்கட்டே. |
இரவுக்குறி வேண்டும் தலைமகனைத் தோழி வரவு அருமை கூறி மறுத்தது. 9 |
280 |
கரு விரல் மந்திக் கல்லா வன் பார்ப்பு |
|
இரு வெதிர் ஈர்ங் கழை ஏறி, சிறு கோல் |
|
மதி புடைப்பது போல் தோன்றும் நாட! |
|
வரைந்தனை நீ எனக் கேட்டு யான் |
|
5 |
உரைத்தனென்அல்லெனோ அஃது என் யாய்க்கே? |
புணர்ந்து உடன்போகிய தலைமகன் தலைமகளைக் கரண வகையான் வரைந்தானாக, எதிர் சென்ற தோழிக்கு, 'இனி யான் இவளை வரைந்தமை நுமர்க்கு உணர்த்த வேண்டும்' என்றானாக, அவள் சொல்லியது. 10 |