291-300 |
291 |
மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும் |
|
துறுகல் அடுக்கத்ததுவே பணைத் தோள், |
|
ஆய் தழை நுடங்கும் அல்குல், |
|
காதலி உறையும் நனி நல் ஊரே. |
|
வரைவிடை வைத்துப் பிரிந்து மீள்கின்ற தலைமகன் சொல்லியது. 1 |
292 |
மயில்கள் ஆல, பெருந் தேன் இமிர, |
|
தண் மழை தழீஇய மா மலை நாட! |
|
நின்னினும் சிறந்தனள், எமக்கே நீ நயந்து |
|
நல் மனை அருங் கடி அயர, |
|
5 |
எம் நலம் சிறப்ப, யாம் இனிப் பெற்றோளே. |
பின்முறை ஆக்கிய பெரும் பொருள் வதுவை முடித்தவளை இல்லத்துக் கொண்டு புகுந்துழி, தலைமகள் உவந்து சொல்லியது. 2 |
293 |
சிலம்பு கமழ் காந்தள் நறுங் குலை அன்ன |
|
நலம் பெறு கையின் என் கண் புதைத்தோயே! |
|
பாயல் இன் துணை ஆகிய பணைத் தோள் |
|
தோகை மாட்சிய மடந்தை! |
|
5 |
நீ அலது உளரோ என் நெஞ்சு அமர்ந்தோரே? |
பகற்குறியிடம் புக்க தலைமகன், தலைவி பின்னாக மறைய வந்து கண் புதைத்துழி, சொல்லியது. 3 |
294 |
எரி மருள் வேங்கை இருந்த தோகை |
|
இழை அணி மடந்தையின் தோன்றும் நாட! |
|
இனிது செய்தனையால்; நுந்தை வாழியர்! |
|
நல் மனை வதுவை அயர, இவள் |
|
5 |
பின் இருங் கூந்தல் மலர் அணிந்தோயே! |
வதுவை செல்லாநின்றுழித் தலைமகற்குத் தோழி கூறியது. 4 |
295 |
வருவதுகொல்லோ தானே வாராது |
|
அவண் உறை மேவலின், அமைவது கொல்லோ |
|
புனவர் கொள்ளியின் புகல் வரும் மஞ்ஞை, |
|
இருவி இருந்த குருவி வருந்துற, |
|
5 |
பந்து ஆடு மகளிரின் படர்தரும் |
குன்று கெழு நாடனொடு சென்ற என் நெஞ்சே? |
|
தலைமகன் வரைவிடை வைத்துப் பிரிந்து நீட்டித்துழி, உடன்சென்ற நெஞ்சினைத் தலைமகள் நினைந்து கூறியது. 5 |
296 |
கொடிச்சி காக்கும் பெருங் குரல் ஏனல் |
|
அடுக்கல் மஞ்ஞை கவரும் நாட! |
|
நடுநாள் கங்குலும் வருதி; |
|
கடு மா தாக்கின், அறியேன் யானே. |
|
இரவுக்குறி வருகின்ற தலைமகற்குத் தோழி ஆற்றருமை கூறி மறுத்தது. 6 |
297 |
விரிந்த வேங்கைப் பெருஞ் சினைத் தோகை |
|
பூக் கொய் மகளிரின் தோன்றும் நாட! |
|
பிரியினும், பிரிவது அன்றே |
|
நின்னொடு மேய மடந்தை நட்பே. |
|
ஒருவழித் தணந்து வரைய வேண்டும் என்ற தலைமகற்குத் தோழி கூறியது. 7 |
298 |
மழை வரவு அறியா மஞ்ஞை ஆலும் |
|
அடுக்கல் நல் ஊர் அசைநடைக் கொடிச்சி |
|
தான் எம் அருளாள்ஆயினும், |
|
யாம் தன் உள்ளுபு மறந்தறியேமே! |
|
தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்கு உணர்த்திய வழி, அவள் நாணத்தினால் மறைத்து ஒழுகிய அதனைக் கூறக்கேட்ட தலைமகன் சொல்லியது. 8 |
299 |
குன்ற நாடன் குன்றத்துக் கவாஅன், |
|
பைஞ் சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும் |
|
அம் சில் ஓதி அசைநடைக் கொடிச்சி |
|
கண்போல் மலர்தலும் அரிது; இவள் |
|
5 |
தன் போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே. |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய நிலைமைக்கண், தலைமகள் ஆய வெள்ளத்தோடு கூடி நிற்கக் கண்ட தலைமகன் மகிழ்ந்த உள்ளத்தானாய்த் தன்னுள்ளே சொல்லியது. 9 |
300 |
கொடிச்சி கூந்தல் போலத் தோகை |
|
அம் சிறை விரிக்கும் பெருங் கல் வெற்பன் |
|
வந்தனன்; எதிர்ந்தனர் கொடையே; |
|
அம் தீம் கிளவி! பொலிக, நின் சிறப்பே! |
|
தலைமகன் தானே வரைவு வேண்டிவிட, சுற்றத்தார் கொடை நேர்ந்தமை தலைமகட்குத் தோழி சொல்லியது. |