371-380 |
371 |
மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும் |
|
உயர் நெடுங் குன்றம் படு மழை தலைஇச் |
|
சுரம் நனி இனிய ஆகுக தில்ல |
|
'அறநெறி இது' எனத் தெளிந்த என் |
|
பிறை நுதல் குறுமகள் போகிய சுரனே! 1 |
372 |
என்னும் உள்ளினள்கொல்லோ தன்னை |
|
நெஞ்சு உணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு, |
|
அழுங்கல் மூதூர் அலர் எழ, |
|
செழும் பல் குன்றம் இறந்த என் மகளே? 2 |
373 |
நினைத்தொறும் கலிழும் இடும்பை எய்துக |
|
புலிக் கோள் பிழைத்த கவைக் கோட்டு முது கலை |
|
மான்பிணை அணைதர, ஆண் குரல் விளிக்கும் |
|
வெஞ் சுரம் என் மகள் உய்த்த |
|
5 |
அம்பு அமை வல் வில் விடலை தாயே! |
தலைமகளைத் தலைமகன் கொண்டு கழிந்த கொடுமை நினைந்து, நற்றாய் சொல்லியது. 3 |
374 |
பல் ஊழ் நினைப்பினும், நல்லென்று ஊழ |
|
மீளி முன்பின் காளை காப்ப, |
|
முடி அகம் புகாஅக் கூந்தலள் |
|
கடுவனும் அறியாக் காடு இறந்தோளே. |
|
தலைமகள் உடன்போயவழி, அவள் இளமை நினைந்து இரங்கித் தாய் கூறியது. 4 |
375 |
'இது என் பாவைக்கு இனிய நன் பாவை; |
|
இது என் பைங்கிளி எடுத்த பைங்கிளி; |
|
இது என் பூவைக்கு இனிய சொல் பூவை' என்று, |
|
அலமரு நோக்கின் நலம் வரு சுடர் நுதல் |
|
5 |
காண்தொறும் காண்தொறும் கலங்க, |
நீங்கினளோ என் பூங் கணோளே? |
|
சேரியும் அயலும் தேடிக் காணாது வந்தாரைக் கண்டு தலைமகள் தாய் சொல்லியது. 5 |
376 |
நாள்தொறும் கலிழும் என்னினும் இடை நின்று |
|
காடு படு தீயின் கனலியர் மாதோ |
|
நல் வினை நெடு நகர் கல்லெனக் கலங்க, |
|
பூப் புரை உண்கண் மடவரல் |
|
5 |
போக்கிய புணர்த்த அறன் இல் பாலே! |
தலைமகள் போயவழி, நற்றாய் விதியை வெகுண்டு சொல்லியது. 6 |
377 |
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை |
|
இயம் புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம் |
|
சென்றனள் மன்ற, என் மகளே |
|
பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே. |
|
தலைமகள் உடன்போயவழி, அவள் பந்து முதலாகிய கண்ட நற்றாய் கலங்கிச் சொல்லியது. 7 |
378 |
செல்லிய முயலிப் பாஅய சிறகர் |
|
வாவல் உகக்கும் மாலை, யாம் புலம்பப் |
|
போகிய அவட்கோ நோவேன்; தே மொழித் |
|
துணை இலள் கலிழும் நெஞ்சின் |
|
5 |
இணை ஏர் உண்கண் இவட்கு நோவதுவே. |
தலைமகள் உடன்போயவழி, அவள் தோழி ஆற்றாமை கண்ட நற்றாய் சொல்லியது. 8 |
379 |
தன் அமர் ஆயமொடு நன் மண நுகர்ச்சியின் |
|
இனிது ஆம்கொல்லோ தனக்கே பனி வரை |
|
இனக் களிறு வழங்கும் சோலை |
|
வயக்குறு வெள் வேலவற் புணர்ந்து செலவே? |
|
புணர்ந்து உடன்போகியவழி, தோழி அறத்தொடு நிற்பக் கேட்ட நற்றாய், 'அதனை முன்னே அறிவித்து, நாம் மணம் புணர்த்த ஒழுகாது போயினள்' என நொந்து சொல்லியது. 9 |
380 |
அத்த நீள் இடை அவனொடு போகிய |
|
முத்து ஏர் வெண் பல் முகிழ் நகை மடவரல் |
|
தாயர் என்னும் பெயரே வல்லாறு |
|
எடுத்தேன் மன்ற, யானே; |
|
5 |
கொடுத்தோர் மன்ற, அவள் ஆயத்தோரே. |
தலைமகள் உடன்போகியவழித் தெருட்டுவார்க்குச் செவிலித்தாய் சொல்லியது. 10 |