அணி நடை எருமை |
96 |
அணி நடை எருமை ஆடிய அள்ளல், |
|
மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் |
|
கழனி ஊரன் மகள், இவள்; |
|
பழன ஊரன் பாயல் இன் துணையே. |
|
பரத்தையர் பலரோடும் ஒழுகுதல் கண்டு பொறாதிருந்த தலைமகள், தலைமகன் மனைக்கண் புகுந்துழி, உடன்படுதல் கண்ட வாயில்கள் தம்முள்ளே சொல்லியது. 6 |