அம்ம வாழி தோழி ஊரன் நம் மறந்து |
36 |
அம்ம வாழி, தோழி! ஊரன் |
|
நம் மறந்து அமைகுவன் ஆயின், நாம் மறந்து |
|
உள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னே |
|
கயல் எனக் கருதிய உண் கண் |
|
5 |
பசலைக்கு ஒல்காவாகுதல் பெறினே. |
தான் வாயில் நேரும் குறிப்பினளானமை அறியாது, தோழி வாயில் மறுத்துழி, அவள் நேரும் வகையால் அவட்குத் தலைமகள் சொல்லியது. 6 |