அம்ம வாழி தோழி காதலர் பாவை அன்ன |
221 |
அம்ம வாழி, தோழி! காதலர் |
|
பாவை அன்ன என் ஆய்கவின் தொலைய, |
|
நல் மா மேனி பசப்ப, |
|
செல்வல்' என்ப தம் மலை கெழு நாட்டே. |
|
'ஒருவழித் தணந்து வரைதற்கு வேண்டுவன முடித்து வருவல்' என்று தலைமகன் கூறக்கேட்ட தலைமகள் அவன் சிறைப்புறத்தானாய்க் கேட்ப, தோழிக்குச்சொல்லியது. 1 |