அம்ம வாழி தோழி சாரல் இலை இல

338
அம்ம வாழி, தோழி! சாரல்
இலை இல மலர்ந்த ஓங்கு நிலை இலவம்
மலை உறு தீயின் சுரமுதல் தோன்றும்
பிரிவு அருங் காலையும், பிரிதல்
5
அரிது வல்லுநர் நம் காதலோரே.

தலைமகன் பிரிந்துழி. 'இக் காலத்தே பிரிந்தார்' எனத் தலைமகள் இரங்கிச் சொல்லியது. 8

உரை

Home
HOME