அம்ம வாழி தோழி சிறியிலைக் குறுஞ் சினை

339
அம்ம வாழி, தோழி! சிறியிலைக்
குறுஞ் சினை வேம்பின் நறும் பழம் உணீஇய
வாவல் உகக்கும் மாலையும்
இன்றுகொல், தோழி! அவர் சென்ற நாட்டே?

தலைமகன் குறித்த பருவ வரவின்கண் மாலைப் பொழுது கண்டு, ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 9

உரை

Home
HOME