அம்ம வாழி தோழி நம் ஊர் நிரந்து

228
அம்ம வாழி, தோழி! நம் ஊர்
நிரந்து இலங்கு அருவிய நெடு மலை நாடன்
இரந்து குறையுறாஅன் பெயரின்,
என் ஆவதுகொல் நம் இன் உயிர் நிலையே?

தலைமகன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அவர் கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி அறத்தொடு நின்றது. 8

உரை

Home
HOME