அம்ம வாழி தோழி நம் ஊர்ப் பொய்கை ஆம்பல் |
35 |
அம்ம வாழி, தோழி! நம் ஊர்ப் |
|
பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால் |
|
நிறத்தினும் நிழற்றுதல் மன்னே; |
|
இனிப் பசந்தன்று, என் மாமைக் கவினே. |
|
வாயிலாய்ப் புகுந்தார் தலைமகன் குணம் கூறிய வழி, 'அவனுக்கு இல்லாதனவே கூறுதலால், இப்பொழுது காண் என் மேனி பசந்தது' எனத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 5 |