அம்ம வாழி தோழி நம் மலை நறுந் தண்

226
அம்ம வாழி,தோழி!நம் மலை
நறுந்தண் சிலம்பின் நாறு குலைக் காந்தள்
கொங்கு உண் வண்டின் பெயர்ந்து புறமாறி, நின்
வன்புடை விறல் கவின் கொண்ட
5
அன்பிலாளன் வந்தனன், இனியே.

வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் நீட்டித்து வந்துழித் தோழி தலைமகட்குச் சொல்லியது. 6

உரை

Home
HOME