அம்ம வாழி தோழி நம் மலை வரை ஆம்

223
அம்ம வாழி, தோழி! நம் மலை
வரை ஆம் இழிய, கோடல் நீட,
காதலர்ப் பிரிந்தோர் கையற, நலியும்
தண் பனி வடந்தை அற்சிரம்
5
முந்து வந்தனர் நம் காதலோரே.

வரைவிடை வைத்துப்பிரிந்த தலைமகன் குறித்த பருவத்திற்கு முன்னே வருகின்றமை அறிந்த தோழி தலைமகட்கு மகிழ்ந்து சொல்லியது. 3

உரை

Home
HOME