அம்ம வாழி தோழி நம்மொடு சிறு தினைக் |
230 |
அம்ம வாழி, தோழி! நம்மொடு |
|
சிறு தினைக் காவலன் ஆகி, பெரிதும் நின் |
|
மென் தோள் ஞெகிழவும், திரு நுதல் பசப்பவும், |
|
பொன் போல் விறல் கவின் தொலைத்த |
|
5 |
குன்ற நாடற்கு அயர்வர் நன் மணனே. |
தலைமகன் வரைவு வேண்டித் தமரை விடுத்துழி, மறுப்பர்கொல்லோ?' என்று அச்சம் உறுகின்ற தலைவிக்குத் தோழி சொல்லியது. 10 |