அம்ம வாழி தோழி நம்வயின் நெய்த்தோர் |
335 |
அம்ம வாழி, தோழி! நம்வயின் |
|
நெய்த்தோர் அன்ன செவிய எருவை |
|
கற்புடை மருங்கில் கடு முடை பார்க்கும் |
|
காடு நனி கடிய என்ப |
|
5 |
நீடி இவண் வருநர் சென்ற ஆறே. |
தலைமகன் சென்ற சுரத்தினிடத்துக் கொடுமை பிறர் கூறக்கேட்ட தலைமகள் ஆற்றாது தோழிக்குச் சொல்லியது. 5 |