அம்ம வாழி தோழி நம்வயின் மெய் உற

337
அம்ம வாழி, தோழி! நம்வயின்
மெய் உற விரும்பிய கை கவர் முயக்கினும்
இனிய மன்ற தாமே
பனி இருங் குன்றம் சென்றோர்க்குப் பொருளே.

தலைமகன் பொருள்வயிற் பிரிந்துழி, தன் முயக்கினும் அவற்குப் பிற்காலத்துப் பொருள் சிறந்தது எனத் தலைவி இரங்கித் தோழிக்குச் சொல்லியது. 7

உரை

Home
HOME