அம்ம வாழி தோழி நன்றும் எய்யாமையின் |
119 |
அம்ம வாழி, தோழி! நன்றும் |
|
எய்யாமையின் ஏதில பற்றி, |
|
அன்பு இலன் மன்ற பெரிதே |
|
மென் புலக் கொண்கன் வாராதோனே! |
|
'வரைதற்கு வேண்டுவன முயல்வேம்' எனச் சொல்லி வரையாது செலுத்துகின்ற தலைமகன் சிறைப்புறத்தான் ஆனமை அறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 9 |