அம்ம வாழி தோழி நாம் அழப் பல் நாள் |
229 |
அம்ம வாழி, தோழி! நாம் அழப் |
|
பல் நாள் பிரிந்த அறனிலாளன் |
|
வந்தனனோ, மற்று இரவில்? |
|
பொன் போல் விறல் கவின் கொள்ளும், நின் நுதலே. |
|
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் மீண்டான் என்பது கேட்டு, தலைமகட்கு எய்திய கவினைத் தோழி, தான் அறியாதாள் போன்று, அவளை வினாவியது. 9 |