அம்ம வாழி தோழி நாளும் நல் நுதல் |
227 |
அம்ம வாழி! தோழி! நாளும், |
|
நல் நுதல் பசப்பவும், நறுந் தோள் ஞெகிழவும், |
|
'ஆற்றலம் யாம்' என மதிப்பக் கூறி, |
|
நப் பிரிந்து உறைந்தோர் மன்ற; நீ |
|
5 |
விட்டனையோ அவர் உற்ற சூளே? |
ஒருவழித் தணந்து வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குத் தோழி சொல்லியது. 7 |