அம்ம வாழி தோழி பல் மலர் நறுந் தண் |
244 |
அம்ம வாழி, தோழி! பல் மலர் |
|
நறுந் தண் சோலை நாடு கெழு நெடுந்தகை |
|
குன்றம் பாடான் ஆயின், |
|
என் பயம் செய்யுமோ வேலற்கு வெறியே? |
|
வெறியாடல் துணிந்துழி, விலக்கலுறுந் தோழி செவிலி கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லியது. 4 |