அம்ம வாழி தோழி பாசிலைச் செருந்தி |
112 |
அம்ம வாழி, தோழி! பாசிலைச் |
|
செருந்தி தாய இருங் கழிச் சேர்ப்பன் |
|
தான் வரக் காண்குவம் நாமே; |
|
மறந்தோம் மன்ற, நாணுடை நெஞ்சே. |
|
களவு நீடுவழி, 'வரையலன்கொல்?' என்று அஞ்சிய தோழிக்குத் தலைமகன் வரையும் திறம் தெளிக்க, தெளிந்த தலைமகள் சொல்லியது. 2 |