அம்ம வாழி தோழி மகிழ்நன் ஒரு நாள் |
32 |
அம்ம வாழி, தோழி! மகிழ்நன் |
|
ஒரு நாள் நம் இல் வந்ததற்கு, எழு நாள் |
|
அழுப என்ப, அவன் பெண்டிர் |
|
தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே. |
|
வாயில் வேண்டிப் புகுந்தார் கேட்பத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 2 |