அம்ம வாழி தோழி மகிழ்நன் நயந்தோர் |
37 |
அம்ம வாழி, தோழி! மகிழ்நன் |
|
நயந்தோர் உண்கண் பசந்து, பனி மல்க |
|
வல்லன் வல்லன் பொய்த்தல்; |
|
தேற்றான், உற்ற சூள் வாய்த்தல்லே. |
|
தலைமகளைச் சூளினால் தெளித்தான் என்பது கேட்ட காதல் பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது. 7 |