அலங்குமழை பொழிந்த |
220 |
அலங்குமழை பொழிந்த அகன்கண் அருவி |
|
ஆடுகழை அடுக்கத்து இழிதரு நாடன் |
|
பெரு வரை அன்ன திரு விறல் வியல் மார்பு |
|
முயங்காது கழிந்த நாள், இவள் |
|
5 |
மயங்கு இதழ் மழைக்கண் கலிழும் அன்னாய்! |
நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10 |