அவிர் தொடி கொட்ப |
314 |
'அவிர் தொடி கொட்ப, கழுது புகவு அயர, |
|
கருங் கண் காக்கையொடு கழுகு விசும்பு அகவ, |
|
சிறு கண் யானை ஆள் வீழ்த்துத் திரிதரும் |
|
நீள் இடை அருஞ் சுரம்' என்ப நம் |
|
5 |
தோள் இடை முனிநர் சென்ற ஆறே. |
தலைமகன் பிரிந்துழி, அவனுடன் போய் மீண்டார் வழியது அருமை தங்களில் கூறக் கேட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 4 |