அள்ளல் ஆடிய புள்ளிக் |
22 |
அள்ளல் ஆடிய புள்ளிக் களவன் |
|
முள்ளி வேர் அளைச் செல்லும் ஊரன் |
|
நல்ல சொல்லி மணந்து, 'இனி |
|
நீயேன்' என்றது எவன்கொல்? அன்னாய்!' |
|
களவினில் புணர்ந்து. பின்பு வரைந்து கொண்டு ஒழுகாநின்றதலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்றாக, ஆற்றாளாகியதலைமகள் தோழிக்குச் சொல்லியது. 2 |