அன்னாய் வாழி வேண்டு அன்னை அஃது எவன்கொல் |
204 |
அன்னாய், வாழி, வேண்டு, அன்னை! அஃது எவன்கொல்? |
|
வரையர மகளிரின் நிரையுடன் குழீஇ, |
|
பெயர்வுழிப் பெயர்வுழித் தவிராது நோக்கி, |
|
நல்லள் நல்லள் என்ப; |
|
5 |
தீயேன் தில்ல, மலை கிழவோற்கே! |
வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 4 |