அன்னாய் வாழி வேண்டு அன்னை என் தோழி நனி நாண் |
205 |
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! என் தோழி |
|
நனி நாண் உடையள்; நின்னும் அஞ்சும்; |
|
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன் |
|
மலர்ந்த மார்பின் பாயல் |
|
5 |
தவ நனி வெய்யள்; நோகோ; யானே. |
நொதுமலர் வரைவு வேண்டி விட்டுழித் தலைமகட்கு உளதாகிய வருத்தம் நோக்கி, 'இவள் இவ்வாறு ஆதற்குக் காரணம் என்னை?' என்று வினவிய செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது. 5 |