அன்னாய் வாழி வேண்டு அன்னை என்னை |
201 |
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! என்னை |
|
தானும் மலைந்தான்; எமக்கும் தழை ஆயின; |
|
பொன் வீ மணி அரும்பினவே |
|
என்ன மரம்கொல், அவர் சாரலவ்வே! |
|
நொதுமலர் வரைவின்கண் செவிலி கேட்குமாற்றால் தலைமகள் தோழிக்கு அறத்தொடுநிலை குறித்து உரைத்தது. 1 |