அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பைத் தேன் மயங்கு

203
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைத்
தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு
உவலைக் கூவல் கீழ
மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே.

உடன்போய் மீண்ட தலைமகள், 'நீ சென்ற நாட்டு நீர் இனிய அல்ல; நீ எங்ஙனம் நுகர்ந்தாய்?' எனக் கேட்ட தோழிக்குக் கூறியது. 3

உரை

Home
HOME