அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பைப் புலவுச் சேர்

210
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைப்
புலவுச் சேர் துறுகல் ஏறி, அவர் நாட்டுப்
பூக் கெழு குன்றம் நோக்கி நின்று,
மணி புரை வயங்கு இழை நிலைபெறத்
5
தணிதற்கும் உரித்து, அவள் உற்ற நோயே.

காப்பு மிகுதிக்கண் தலைமகள் மெலிவுகண்டு, 'தெய்வத்தினான் ஆயிற்று' என்று வெறியெடுப்புழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10

உரை

Home
HOME