அன்னை வாழி வேண்டு அன்னை உதுக் காண் |
101 |
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! உதுக் காண் |
|
ஏர் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு |
|
நெய்தல் மயக்கி வந்தன்று, நின் மகள் |
|
பூப் போல் உண்கண் மரீஇய |
|
5 |
நோய்க்கு மருந்து ஆகிய கொண்கன் தேரே. |
அறத்தோடு நின்ற பின்னர் வரைதற் பொருட்டுப் பிரிந்த தலைமகன் வரைவோடு புகுந்தவழித் தோழி செவிலிக்குக் காட்டிச் சொல்லியது. 1 |