அன்னை வாழி வேண்டு அன்னை முழங்குகடல் |
105 |
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! முழங்குகடல் |
|
திரை தரு முத்தம் வெண் மணல் இமைக்கும் |
|
தண்ணம் துறைவன் வந்தென, |
|
பொன்னினும் சிவந்தன்று; கண்டிசின் நுதலே. |
|
அறத்தொடு நின்ற பின் வேண்டுவன தருதற்குப் பிரிந்த தலைமகன் வரைவொடு வந்துழி, தலைமகள் நுதற்கண் முன்புள்ள பசப்பு நீங்கும் வண்ணம் தோன்றிய கதிர்ப்புக் காட்டி, செவிலிக்குத் தோழி சொல்லியது. 5 |