ஆய் நலம் பசப்ப |
318 |
ஆய் நலம் பசப்ப, அரும் படர் நலிய, |
|
வேய் மருள் பணைத் தோள் வில் இழை நெகிழ, |
|
நசை நனி கொன்றோர் மன்ற விசை நிமிர்ந்து |
|
ஓடு எரி நடந்த வைப்பின், |
|
5 |
கோடு உயர் பிறங்கல், மலை இறந்தோரே. |
'நம்மைப் பிரியார்' என்று கருதியிருந்த தலைமகள், அவன் பிரிந்துழி, இரங்கிச் சொல்லியது. 8 |