ஆர் குரல் எழிலி |
411 |
ஆர் குரல் எழிலி அழிதுளி சிதறிக் |
|
கார் தொடங்கின்றால், காமர் புறவே; |
|
வீழ்தரு புதுப்புனல் ஆடுகம் |
|
தாழ் இருங் கூந்தல்! வம்மதி, விரைந்தே. |
|
பருவம் குறித்துப் பிரிந்த தலைமகன் அப் பருவத்திற்கு முன்னே வந்து, தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழிப் பருவம் வந்ததாக, தான் பருவத்திற்கு முன்னே வந்தமை தோன்றக் கூறுவான் தலைவிக்கு உரைத்தது. 1 |