ஒண் தொடி அரிவை |
172 |
ஒண் தொடி அரிவை கொண்டனள், நெஞ்சே! |
|
வண்டு இமிர் பனித் துறைத் தொண்டி ஆங்கண் |
|
உரவுக் கடல் ஒலித் திரை போல, |
|
இரவினானும் துயில் அறியேனே! |
|
'கண் துயில்கின்றிலை; இதற்குக் காரணம் என்?' என்று வினவிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது. 2 |